தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குப் பாராட்டு

போதை, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 5:38 am IST

போதை, மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்கு ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
சரஸ் அரக்கட்டளை, மங்குழியிலுள்ள காந்தி அமைதி மையம் ஆகிய அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கூடலூர் ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்தில் போதை மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தின. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். சமூக நல அலுவலர் புஷ்பா,  வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், திட்ட அலுவலர் பாபு, கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் மகேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் தர்மலிங்கம், சரஸ் அறக்கட்டளை நிர்வாகி வசந்தகுமாரி, காந்தி அமைதி மையச் செயலாளர் சுமதி, ஆஷாபவன் முதியோர் இல்ல நிர்வாகி பிலோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதில், போதையின் தீமைகள் குறித்து விளக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   இதைத் தொடர்ந்து, முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டது.  ராமகிருஷ்ணா முதியோர் இல்லம், ஆஷாபவன் முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 40க்கும்  மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.