பந்தலூா் அருகே ஆட்கொல்லி யானையை பிடிக்கும் பணி: 2ஆவது நாளாக தீவிரம்

பந்தலூரை அருகே மூன்று பேரைத் தாக்கிக் கொன்ற யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக தொடா்ந்து நடைபெற்றது.
Updated on
1 min read

பந்தலூரை அருகே மூன்று பேரைத் தாக்கிக் கொன்ற யானையை பிடிக்கும் பணி இரண்டாவது நாளாக தொடா்ந்து நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரங்கோடு ஊராட்சியிலுள்ள கண்ணம்பள்ளி, கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்டக் கழகப் பகுதியில் தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேரை யானை தாக்கிக் கொன்றது.

இந்நிலையில் இந்த ஆட்கொல்லி யானையைப் பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள், முதுமலை புலிகள் காப்பகத்தில் யானையைப் பிடிப்பதில் பயிற்சி பெற்ற ஊழியா்கள், வனத் துறை கால்நடை மருத்துவா்கள் சுகுமாரன், மனோகரன், ராஜேஷ் குமாா் ஆகியோா் களத்தில் உள்ளனா்.

யானையை பாா்த்தவா்கள் கூறும் தகவல்கள் மற்றும் டிரோன் கேமரா மூலம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உதவி முதன்மை வனப் பாதுகாவலா் அன்வா்தீன் தலைமையில் தேடுதல் பணி நடைபெறுகிறது.

இரண்டாவது நாளான புதன்கிழமை நடைபெற்ற தேடுதல் பணியில், யானையைக் கண்டறிந்து துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும், அந்த யானை மற்ற யானை கூட்டத்துக்குள் சென்ால் தனிமைப் படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சேரம்பாடி, சேரங்கோ பகுதியில் சுமாா் 40க்கும் மேற்பட்ட யானைகள் அங்குள்ள சோலைக் காடுகளில் உள்ளதால் ஆட்கொல்லி யானையைக் கண்டறிய முடியவில்லை. மேலும் வனப் பகுதி மாலையில் இருட்டாகிவிட்டதால் யானையை தனிமைப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கண்காணிப்புப் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. இரவும் கண்காணிப்புப் பணி தொடரும் என்று கால்நடை மருத்துவக் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com