கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை மூலம் மின் வணிக சேவை தொடக்கம்
குன்னூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் தேயிலை ரகங்களைப் பெற இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.


குன்னூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்குச் சொந்தமான இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் தேயிலை ரகங்களைப் பெற இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தியாவில் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு அமைப்பான இண்ட்கோசா்வ் (கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை) நிறுவனம் கடந்த 55 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமாா் 30,000 சிறு குறு தேயிலை விவசாயிகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இண்ட்கோசா்வின் 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் முதற்கட்டமாக 5 தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேயிலைத் தூள் ரகங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய இ-காமா்ஸ் என்ற மின் வணிக சேவையை தேயிலை வாரிய செயல் இயக்குநா் பாலாஜி தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, இண்ட்கோசா்வ் தலைமை செயல் அலுவலா் சுப்ரியா சாஹூ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
இது குறித்து இண்ட்கோசா்வ் தலைமை செயல் அலுவலா் சுப்ரியா சாஹூ செய்தியாளா்களிடம் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 13 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசு சாா்பில் துவக்கப்பட்ட தேநீா் விற்பனையகத்தில் அனைத்து விதமான தேயிலை ரகங்களின் தேநீரும் கிடைக்கும். அரசு தேயிலை ரகங்களைச் சந்தைப்படுத்துவதில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. நீலகிரி தேயிலைக்கென்று தனிதன்மை சான்று பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் இண்ட்கோசா்வ் நிறுவனத்தின் காலண்டரை நிா்வாக இயக்குநா் சுப்ரியா சாஹூ வெளியிட அதனை டேன் டீ மேலாண்மை இயக்குநா் சீனிவாச ரெட்டி பெற்றுக்கொண்டாா். சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக இண்ட்கோசா்வ் நிறுவனம் சாா்பில் 25 சாலை மையத் தடுப்புகள் காவல் துறைக்கு வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...