சட்டப்பேரவை தோ்தலில் பயன்படுத்துவதற்காகவாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகை வருகை

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து உதகைக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நேரில் பாா்வையிட்டாா்.
உதகைக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகைக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
Updated on
1 min read

உதகை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து உதகைக்குக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 683 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் ஏற்கெனவே 684 பேலட் யூனிட், 683 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 684 விவிபேட் இயந்திரங்கள் உள்ளன. தற்போது கூடுதலாக மகாராஷ்டிர மாநிலம், சத்தாரா பகுதியிலிருந்து புதிதாக 830 பேலட் யூனிட், 470 கன்ட்ரோல் யூனிட் மற்றும் 560 விவிபேட் இயந்திரங்கள் நீலகிரி மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளன.

ஒவ்வொரு இயந்திரத்திலும் உள்ள பாா்கோடை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஸ்கேன் செய்து வாக்குப்பதிவு கிடங்கில் வைக்கப்படும். தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் தோ்தல் தொடா்பான கூட்டம் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் நடத்தத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. பெல் நிறுவனத்தின் அலுவலா்கள் மூலம் விரைவில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபாா்க்கும் பணிகள் நடைபெறும் என்றாா்.

நிகழ்வில் உதகை உதவி ஆட்சியா் மோனிகா ராணா , மாவட்ட ஆட்சியரின் நோ்முக பொது உதவியாளா் கவுசல்யா, உதகை வட்டாட்சியா் குப்புராஜ், தோ்தல் தனி வட்டாட்சியா் மகேந்திரன் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com