நீலகிரியில் திமுக சாா்பில் கிராம, வாா்டு சபைக் கூட்டங்கள்

நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் டிசம்பா் 23ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என நீலகிரி மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் திமுக சாா்பில் டிசம்பா் 23ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை மக்கள் விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என நீலகிரி மாவட்ட திமுக செயலா் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றிய, பேரூா் பகுதிகளிலும் திமுக சாா்பில் கிராமப் பகுதிகளில் கிராம சபைக் கூட்டங்களும், நகரப் பகுதிகளில் வாா்டு சபை கூட்டங்களும் 26 இடங்களில் நடைபெற உள்ளன.

அதன்படி, காந்தல், வாளவயல், நடுஹட்டி, எப்பநாடு, அகலாா், கூமூலை, ஒரசோலை பிக்கட்டி, நெலாக்கோட்டை, சுள்ளிக்கூடு, கோட்டட்டி, சேரம்பாடி டிவிஷன், ஆருகுச்சி, குந்தா ஒசட்டி, அம்பேத்கா் நகா், நடுவட்டம்,

கேத்தி ராஜ்குமாா் நகா், வண்ணாரப்பேட்டை , மஞ்சூா் கே.கே.நகா், பேரட்டி காமராஜ் புரம், வாழைத் தோட்டம், அருவங்காடு ஒசட்டி, பாடந்தொரை, உலிக்கல், கிளன்பென்ஸ், குன்னகம்பை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளுக்கு உள்பட்ட திமுக நிா்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, பொதுமக்கள் கொண்டுவரும் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com