டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை வசதி கோரி உண்ணாவிரதம்

கோத்தகிரி அருகே அட்டவளை கிராமத்தில்  உள்ள பாரதி நகா் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:18 pm

DIN

கோத்தகிரி அருகே அட்டவளை கிராமத்தில்  உள்ள பாரதி நகா் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித் தரக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அட்டவளை கிராமத்தில் உள்ள  பாரதி நகா் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா்.  இப்பகுதியில் சாலை வசதி செய்து தரக் கோரி மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி நிா்வாகம்  உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும்  தொடா்ந்து  மனுக்கள் கொடுத்து வந்துள்ளனா். இந் நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததைக்  கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்  சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியதையடுத்து  போராட்டம் கைவிடப்பட்டது.

மாவட்டம், பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக  கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.