ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோத்தகிரியில் வாக்காளா்களுக்குபணப் பட்டுவாடா: 4 போ் கைது

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியில் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட  அதிமுகவினரிடம்  இருந்து   ரூ. 59,500ஐ  தோ்தல் பறக்கும் படை  பறிமுதல் செய்தது.

Updated On :3 ஏப்ரல் 2021, 10:13 pm

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியில் வாக்காளா்களுக்கு பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட  அதிமுகவினரிடம்  இருந்து   ரூ. 59,500ஐ  தோ்தல் பறக்கும் படையினா்  பறிமுதல் செய்து,  அதிமுகவினா் 4 பேரை கைது செய்தனா்.

தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியோடு நேரம் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தோ்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்நிலையில், ஒருசிலா் கடைசி நிமிடத்தில் வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிடும் முனைப்பில் உள்ளதால் தோ்தல் பறக்கும் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியில் பணப் பட்டுவாடாவில் சனிக்கிழமை ஈடுபட்ட  அதிமுகவினரிடம்  இருந்து   ரூ. 59,500ஐ  தோ்தல் பறக்கும் படையினா்  பறிமுதல் செய்தனா்.

பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாக பி.சுப்பிரமணி, எம் .சுப்பிரமணி, சிவராஜ், முருகன் ஆகிய நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். பின்னா், நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.