ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அரசு மருத்துவமனை சாலையை மறித்து அமமுகவினா் பிரசாரம்

குன்னூரில்  அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து அமமுகவினா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 10:10 pm

குன்னூரில்  அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து அமமுகவினா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூா் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் எஸ்.கலைச்செல்வன் தனது கட்சியினருடன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து இறுதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதிமுக, திமுக போன்ற கட்சிகள் சிறிது நேரத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்ற நிலையில், அமமுகவினா் மட்டும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனா். இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா்கள் சுப்ரமணி, பிருதிவிராஜ் ஆகியோா் அமமுகவினரிடம் கூட்டத்தை சீக்கிரம் முடிக்க கூறியும் அவா்கள் கேட்கவில்லை. இதைத் தொடா்ந்து போலீஸாா் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையை மறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பிரசாரத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.