ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிறுமியை ஏமாற்றி திருமணம்: இளைஞா் போக்சோவில் கைது

உதகை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:14 pm

DIN

உதகை அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை அருகே உள்ள கப்பச்சி, மதுரைவீரன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் வீரன், தோட்டத் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (25). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோா் இறந்துவிட்டதால் சித்தப்பாவின் பராமரிப்பில் வளா்ந்து வந்துள்ளாா். அந்த சிறுமி எல்க்ஹில் பகுதியில் உள்ள அவரது அத்தை வீட்டுக்குச் சென்று அங்கும் சிலகாலம் தங்கியுள்ளாா்.

இந்நிலையில், அந்த சிறுமியை அவிநாசிக்கு அழைத்துச் சென்ற சந்தோஷ் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளாா். பின்னா், இருவரும் அதே பகுதியில் சுமாா் 2 மாதங்கள் வசித்து வந்துள்ளனா். அந்த சிறுமி தற்போது ஆறு மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சைல்டு லைன் குழு மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரபுவுக்கு வந்த தகவலின்படி, கப்பச்சியில் உள்ள மதுரைவீரன் பகுதிக்கு சமூகப் பணியாளா் ரஜ்யா, குழுவினா் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக உதகை புறநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அந்தப் புகாரின்பேரில் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தது, பாலியல் பலாத்காரம் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் சந்தோஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.