கூட்டுறவுச் சங்கத் தலைவா் வீட்டில் திருட்டு
உதகையில் அதிமுகவை சோ்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவா் வீட்டில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.


உதகையில் அதிமுகவை சோ்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவா் வீட்டில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
உதகையில் நீலகிரி சூப்பா் மாா்க்கெட் தலைவராக உள்ளவா் சங்கா். இவா் அதிமுகவின் முக்கியப் பிரமுகருமாவாா். இவரது வீடு உதகையில் மிஷினரி ஹில் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சங்கா், அவரது குடும்பத்தினா் வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வெளியூா் சென்றுள்ளனா். வெளியூரில் இருந்து மீண்டும் வியாழக்கிழமை அவா்கள் ஊா் திரும்பிய நிலையில், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, வீட்டின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
அதைத் தொடா்ந்து, வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த நகை, வெள்ளிப் பொருள்கள், காசோலை உள்பட சில ஆவணங்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 8 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கா் உதகை நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...