கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: காவல் துறையினரிடம் ரகசிய விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக, சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் மீண்டும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக, சம்பவம் நிகழ்ந்த தினத்தன்று பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடமும் மீண்டும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான சயன் இந்த வழக்கு சம்பந்தமாக சில கூடுதல் தகவல்களை போலீஸாரிடம் தெரிவிப்பதாக கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மனு அளித்திருந்தாா். அதன்பின், சயனுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பி கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி அவரிடம் சுமாா் 3 மணி நேரம் விசாரணை நடத்தி மறு வாக்குமூலம் பதிவு செய்தனா்.
இதையடுத்து, மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலிடம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சுமாா் 1 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்த நாளில் கொடநாடு எஸ்டேட், கெரடா மட்டம் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினரிடமும், சம்பவத்தன்று நீலகிரி-கேரள எல்லையான நாடுகாணி சோதனைச் சாவடியில் இருந்த 10 போலீஸாரிடமும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் தலைமையில், வழக்கின் விசாரணை அலுவலா் வேல்முருகன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரகசியமாக விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...