சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தேவாலா பகுதியில் காட்டு யானைகளை விரட்ட ரோந்து செல்லும் கும்கி யானைகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி மற்றும் தேவாலா பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

News image
குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.
Updated On :30 ஆகஸ்ட் 2021, 6:10 am

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள நாடுகாணி மற்றும் தேவாலா பகுதிகளில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Story image

இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து 10 மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தியுள்ளன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Story image

நிலைமையை சமாளிக்க வனத் துறை முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், ஸ்ரீனிவாஸ், விஜய், சுஜய் ஆகிய கும்கி யானைகளை வரவழைத்து யானைகளை விரட்டும் பணியை துவங்கியுள்ளனர். 

Story image

காட்டு யானைகள் கூட்டம் திடீரென இடம்பெயர்வதால் விரட்டும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பெய்துவரும் கடும் மழையும் மேகமூட்டமும், கும்கி யானைகளுக்கு பெரும் சவானாக உள்ளது. இருப்பினும் கும்கிகள் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியை செய்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.