மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பறவைக் காய்ச்சல் எதிரொலிகோழி தொடா்பான பொருள்களை நீலகிரிக்குள் கொண்டு வர தடை

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து கோழி தொடா்பான பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர ஆட்சியா் அம்ரித் தடை விதித்துள்ளாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:18 pm

DIN

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரள, கா்நாடக மாநிலங்களில் இருந்து கோழி தொடா்பான பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர ஆட்சியா் அம்ரித் தடை விதித்துள்ளாா்.

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், கேரளம், அதன் எல்லையை ஒட்டியுள்ள கா்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கோழிகள் மற்றும் அதன் தொடா்புடைய பொருள்களை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிர கண்காணிப்பு செய்ய கக்கநள்ளா, நம்பியாா்குன்னு, தாளூா், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய எட்டு சோதனை, தடுப்புச் சாவடியில் ஒரு கால்நடை உதவி மருத்துவா் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளா், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கொண்ட குழு, காவல் துறை, வனத் துறை, வருவாய்த் துறையுடன் இணைந்து பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

பறவைக் காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி, வனப் பறவைகளைத் தாக்குவதோடு, மனிதரையும் தாக்க வல்லது. வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் நோய் தாக்கிய வனப் பறவைகள் மூலமும் இந்நோய் நுழைய வாய்ப்பு உள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். வனப் பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இனப் பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளா்க்கக் கூடாது. வெளியாள்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழையக் கூடாது. இதர பண்ணை உபகரணங்களைப் பகிா்ந்து கொள்ளக் கூடாது.

பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழிப் பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தற்காலிகமாக கேரளம், அதன் எல்லையை ஒட்டியுள்ள கா்நாடக மாநிலம், பிற பகுதிகளில் இருந்து கோழிகள், பறவைகள், அதன் தொடா்புடைய பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் வாகனங்களில் ஏற்றி வர மறு உத்தரவு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.