குன்னூா் அருகே ஏலச் சீட்டு நடத்தி சுமாா் 200 பேரிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்தவா் குறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
குன்னூா் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் 20 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்தவா் அபாஸ். இவா் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். இவ்வாறு குன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 200க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ. 2 கோடி வரை வசூலித்து ஏலச் சீட்டு நடத்தி வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக வாடிக்கையாளா்களுக்கு உரிய முறையில் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. திடீரென ஓட்டுப்பட்டறையில் இவா் நடத்தி வந்த கடையை மூடிவிட்டு கேரளத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். ஆனால், ரூ. 5 லட்சம் வரையிலான பொருளாதார குற்றச் செயல்கள் மட்டுமே குன்னூரில் விசாரிக்க முடியும் என்றும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கும்படியும் காவல் துறையினா் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்ததன்பேரில், இந்த மனுவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக கூட்டத்தில் மயங்கி விழுந்து சிறுவன்

மானாமதுரை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடு தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


