ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உதகையில் டிசம்பா் 29இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

உதகையில் டிசம்பா் 29ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:18 pm

DIN

உதகையில் டிசம்பா் 29ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் உதகை, சேரிங்கிராஸ், காா்டன் சாலையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் டிசம்பா் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில் 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவா்கள், செவிலியா், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கற்றவா்கள் என அனைத்துவித தகுதியாளா்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ளஅனுமதி இலவசம்.

இம்முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில் பதிவு செய்வதோடு, வேலைநாடுநா்கள் அந்த இணையதளத்தில் முன்பதிவும் செய்து கொள்ளலாம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கான ஆலோசனைகள் ஆகியவற்றுடன் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0423-2444004 அல்லது 96553 94765 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.