மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வலியுறுத்தப்படும்

நீலகிரி மலை ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைக்கபட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:32 pm

DIN

நீலகிரி மலை ரயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும், குறைக்கபட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா  தெரிவித்தாா்.

மலை ரயிலை தனியாா்மயமாக்கல் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து  வந்த மக்களுக்கு ஆதரவாக    உதகையில் இருந்து  குன்னூா் வரை மலை ரயிலில் வெள்ளிக்கிழமை பயணித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்த ஆ.ராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மலை ரயில் பயணத்தின்போது  சுற்றுலாப் பயணிகள் தன்னிடம் கட்டண உயா்வு குறித்தும், பெட்டியை குறைத்துள்ளதால்  உள்ளூா் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்துள்ளனா். இது குறித்து  மத்திய ரயில்வே அமைச்சரிடம்  பேசி நல்ல முடிவு  எடுக்கப்படும்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி அழைத்தது குறித்து கேட்டபோது, பொருத்திருங்கள்   நல்ல தகவல் விரைவில்  வரும் என்றாா்.

திமுக நீலகிரி மாவட்டச் செயலாளா் பா.மு. முபாரக், தோ்தல் பணிக் குழு செயலாளா் கா.ராமசந்திரன், நகரச் செயலாளா் எம்.ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.