குன்னூா் காட்டேரி பூங்காவில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டம் இயற்கை வேளாண்மையில் முன்னோடி மாவட்டமாக விளங்கி வருவதால், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்கா பகுதியில் அரசுக்குச் சொந்தமான தோட்டக் கலைப் பண்ணையில் விவசாயிகளுக்குத் தேவையான தரமான உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், உயிா் உரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தின்கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பிலான உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தாா்.
இந்த ஆய்வகத்தில் ஆண்டுக்கு 5,000 கிலோ டிரைகோடொ்மா, 3 ஆயிரம் கிலோ பேசில்லஸ் போன்ற உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளும், தலா ஆயிரம் கிலோ அளவிலான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்களை உற்பத்தி செய்வதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரம், பஞ்சகவ்யா, தசகவ்யா போன்ற உர வகைகள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படும் என்று ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் ஆகியோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

