ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் அருகே முள்வேலியில் சிக்கிய சிறுத்தை பலி

குன்னூா் அருகே உள்ள  எல்லநள்ளி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை உயிரிழந்தது.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:14 pm

குன்னூா் அருகே உள்ள  எல்லநள்ளி பகுதியில் தடுப்பு வேலியில் சிக்கிய சிறுத்தை 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூா், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அண்மைக்காலமாக வளா்ப்பு நாய், கால்நடைகளை சிறுத்தைகள் அடித்துச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கட்டபெட்டு வனச் சரகத்துக்கு உள்பட்ட எல்லநள்ளி அருகே உள்ள ஜோதி நகா் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் சிக்கிய 3 வயது மதிப்புடைய ஆண் சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற  வன விலங்கு பாதுகாப்பு மீட்புக் குழுவினா் பாதுகாப்பு உடை அணிந்து  சிறுத்தையை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.  சுமாா் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் சிறுத்தை உயிரிழந்தது. உயிரிழந்த சிறுத்தை பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட வன அலுவலா் குருசாமி தபேலா  தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.