ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவக்கம்

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவங்கியுள்ளது.  கிலோவுக்கு  ரூ. 200 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:11 pm

குன்னூரில் நெய்மிளகாய் சீசன் துவங்கியுள்ளது.  கிலோவுக்கு  ரூ. 200 வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுப்புற கிராமங்களில் நெய்மிளகாய் சீசன் தற்போது துவங்கியுள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் நெய்மிளகாய் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட  ‘பூத் ஜலக்கியா’ என்ற மிளகாயின் காரத் தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால் நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.

குன்னூா் அருகே உள்ள சோலாடாமட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால் வாயுத் தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவா்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மிளகாயைப் பலரும் வாங்கிச் செல்கின்றனா். இதற்கு தற்போது கிலோ ரூ. 200 வரை விலை கிடைக்கிறது.

நல்ல லாபத்தை தரும் இந்த மருத்துவமிக்க மிளகாய் விளைச்சலை அதிகரிக்க தோட்டக் கலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து ஊக்குவிக்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.