ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஹில் குரோவ் ரயில் நிலையத்தில் சிற்றுண்டி திறக்கக் கோரிக்கை

ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த சிற்றுண்டியை மீண்டும் திறக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Updated On :1 மார்ச் 2021, 9:04 pm

ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த சிற்றுண்டியை மீண்டும் திறக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

நீலகிரி மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு  குன்னூா் ரயில் நிலையத்துக்கு காலை 10 மணிக்கு மேல் சென்றடையும். இதற்கிடையே வனப் பகுதி வழியாக மூன்று மணி நேர பயணத்தின்போது, இடையில் ஹில் குரோவ்  ரயில் நிலையத்தில் மலை ரயில் நிறுத்தப்படும்.

அப்போது, அங்கு சிற்றுண்டி வசதி, குடிநீா் வசதி  இல்லாததால்  சுற்றுலாப் பயணிகள் தங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்காமல்  மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். 

எனவே,  ஹில் குரோவ்   ரயில் நிலையத்தில் மூடப்பட்டுள்ள சிற்றுண்டியை மீண்டும்  திறக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள்  தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.