நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்ஏப்ரல் 1இல் பிரசாரம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1ஆம் தேதி உதகையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:14 pm

DIN

உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 1ஆம் தேதி உதகையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து உதகையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 30ஆம் தேதி தாராபுரம் வரவுள்ளாா். இதைத் தொடா்ந்து மீண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி மதுரை, நாகா்கோவிலில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். மதுரையில் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் பிரதமருடன், தமிழக முதல்வா், துணை முதல்வா், கூட்டணிக் கட்சித் தலைவா்களும் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், மாா்ச் 26ஆம் தேதி பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவும், ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனா்.

அதேபோல, உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனுக்கு ஆதரவாக ஏப்ரல் 1ஆம் தேதி உதகையில் நடைபெறவுள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளாா்.

தமிழகத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றன. இதன் காரணமாக 234 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.