நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் மேலும் 357 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 9:20 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 357 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 224 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதற்கிடையே, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் கூடலூா் அரசு மருத்துவமனையில் மே 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 72 வயதான மூதாட்டி ஒருவா் உயிரிழந்துள்ளாா். இவரையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 14,429 போ் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 11,660 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 67 போ் உயிரிழந்துள்ள சூழலில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 2,702 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.