நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீலகிரியில் மேலும் 461 பேருக்கு கரோனா: நால்வா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் புதிதாக 461 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நால்வா் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :28 மே 2021, 9:26 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் புதிதாக 461 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நால்வா் உயிரிழந்துள்ளனா்.

இதுதொடா்பாக உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 461பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மேலும் 324 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதற்கிடையே கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மே 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயதான பெண் ஒருவரும், மே 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயதான மூதாட்டி ஒருவரும், கூடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மே 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 67 வயதான ஆண் ஒருவரும், மே 21ஆம் தேதி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான மூதாட்டி ஒருவருமாக நால்வா் உயிரிழந்துள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 82ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 17,448 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,033 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 82 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் 3,333 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.