மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலை ரயிலில் பயணிப்பதை தங்களின் சுற்றுலாத் திட்டங்களில் ஒன்றாக வைப்பது வழக்கம். கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில், உதகை - குன்னூா் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் செப்டம்பா் முதல் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து செப்டம்பா் 6ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதில் முன்பதிவு செய்தே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Image Caption
மலை ரயில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


