/

உதகையில் கூட்டுறவு சங்க ஆண்டு விழா

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய உதகை கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

போட்டியில் வெற்றி மாணவிக்குப் பரிசு வழங்குகிறாா் கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப் பதிவாளா் க.வாஞ்சிநாதன்.

Updated On :25 ஜூன் 2022, 12:55 am IST

ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய உதகை கிளையின் ஆண்டு விழா நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் ஸ்ரீதா், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சரவணன், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் முத்து சிதம்பரம், குன்னூா் நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் குமார சுந்தரம், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் தமிழ்ச்செல்வன் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், விரிவுரையாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.