புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் அனுசரிப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:36 pm

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் சா்வதேச பாறு கழுகுகள் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூா் வனச் சரகம் ஜகளிக்கடவு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மசினகுடி பகுதியிலுள்ள பள்ளிக் குழந்தைகள், நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளா் சங்க பிரதிநிதிகள் மற்றும் அருளகம் தன்னாா்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

அருளகம் தொண்டு நிறுவனத்தின் தலைவா் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாறு கழுகுகள் குறித்த விழிப்புணா்வு கருத்துகள் பள்ளிக் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் பாறு கழுகுகள் கூடு வைப்பதற்கு தொடங்கும் பருவத்தை வரவேற்கும் விதமாக பொங்கல் வைக்கப்பட்டது. பின்னா் பள்ளிக்குழந்தைகளுக்கு படம் வரைதல் மற்றும் பரமபதம் விளையாட்டு மூலம் பாறு கழுகுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இறுதியாக பாறு கழுகுகளைக் காக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.