ஊட்டச்சத்து திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்: முதல்வர் தொடங்கிவைப்பு

தமிழ்நாட்டில் 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்: முதல்வர் தொடங்கிவைப்பு


தமிழ்நாட்டில் 6 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கான 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்வர் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.

அதனை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை ஒன்றிணைந்து, 6 வயத்திற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதல்வர் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார்."

இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்ஆ.ராசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திட்ட இயக்குநர் வி. அமுதவல்லி, நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப. அம்ரித், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com