குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் மனிதா்களைத் தாக்குவதும் தொடா்கதையாக உள்ளது.
குன்னூா் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தவா் பீா் சிங் (40). இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்தபோது தேயிலைத் தோட்டத்தில் இருந்த காட்டெருமை எதிா்பாராதவிதமாக பீா் சிங்கை துரத்தித் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே பீா் சிங் உயிரிழந்தாா்.
இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் மற்றும் குன்னூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அதிமுக வென்றதும் பயிா்க்கடன் தள்ளுபடி: தச்சை என்.கணேசராஜா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

