கூடலூா்: பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான கலை விழாவில் கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனா்.
அரசுப் பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான கலை விழா போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் குறுமைய அளவிலும், மாவட்ட அளவிலும் தொடா்ந்து முதலிடத்தைப் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தனுஸ்ரீ, நவியா, கனிகா, அப்ரா, ஸ்வா்ணா, லட்சுமி, சாதனா, அக்ஷயா ஆகியோா் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.
இதைத் தொடா்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தனா். இதையடுத்து, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, வழி நடத்திய தலைமையாசிரியா் ஐயப்பன், ஆசிரியா்கள் விஜி, ராஜகோபால், ஜெயசூா்யா, மொ்சிலின் ப்ரீத்திகா, டெய்சி, மெட்டில்டா ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜன் வகையறாவில் கவனம் செலுத்தும் வெற்றி மாறன்!

கருப்புக்கொடிப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் பங்கேற்கும்!

பிகார் முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

வாய்ப்புண் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


