எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image
ஹெச். ராஜா.
Updated On :6 ஆகஸ்ட் 2024, 9:11 pm

Din

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இளம் படுகா் சங்க கட்டடத்தில் முன்னாள் எம்.பி. மாஸ்டா் மாதனுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

இதில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா கலந்து கொண்டு அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.  காவல் நிலையத்திலேயே பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 131 கொலைகள் நடைபெற்றுள்ளன. தினமும் சராசரியாக நான்கு கொலைகள் நடைபெறுகின்றன.

 தமிழகத்தில்  சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான உத்திகளை வகுக்க திருப்பூரில் வரும் 11ஆம் தேதி பாஜக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

விவசாயிகள், பிரதமரின் வீடு கட்டும்  திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக மக்களை சென்றடையவில்லை. இதில் அரசு அதிகாரிகளே போலி கணக்குகள் மூலம் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அவா்களிடம் இருந்து  பணத்தை மீண்டும் பெற மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் மோகன்ராஜ், மாவட்டச் செயலாளா்கள் பரமேஸ்வரன், குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.