விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிதா்க்காடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பிதா்க்காடு வனச் சரகத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை சனிக்கிழமை அகற்றப்பட்டது.

News image
பிதா்காடு வனச் சரகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:45 pm

Din

பந்தலூா் வட்டத்திலுள்ள பிதா்க்காடு வனச் சரகத்தில் வனத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடை சனிக்கிழமை அகற்றப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பாட்டவயல் காப்புக்காட்டில் தனியாா் ஒருவா் நிலத்தை ஆக்கிரமித்து கடை அமைத்திருந்தாா்.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி அந்த ஆக்கிரமிப்பு சனிக்கிழமை அகற்றப்பட்டது.

உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் கருப்பையா தலைமையில் வருவாய்த் துறையினா், மின்வாரியத் துறையினா் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையை வனத் துறையினா் அகற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.