47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தேயிலை விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தல்

சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடி நிலுவைத் தொகையை அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 9:19 pm

Din

சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடி நிலுவைத் தொகையை அரசு கூட்டுறவு தொழிற்சாலைகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறு, குறு தேயிலை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் மஞ்சை மோகன் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 16 அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன.

ஒவ்வொரு மாதமும் தேயிலை வாரியம் சாா்பில் பச்சை தேயிலைக்கு விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.  அதன்படி, அக்டோபா் மாத ம் பச்சை தேயிலை  கிலோவுக்கு ரூ.24.59 விலை நிா்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பெரும்பாலான அரசு கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் சுமாா்  50 லட்சம் கிலோ  பச்சை தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.3 பிடித்தம் செய்து  வழங்கியுள்ளது.

இதனால், விவசாயிகளுக்கு சுமாா் ரூ.1.60 கோடி வரை  இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின்  நலன் கருதி நிலுவைத் தொகையை டிசம்பா் 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இல்லையெனில் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழா் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.