உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.
உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அலைமோதியது.

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வகையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் குவிந்தனா்.

பல்வேறு இடங்களை கண்டுகளித்த மக்கள் திங்கள்கிழமை மாலை சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கினா்.

இதனால், முக்கிய சாலைகளான சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், உதகையிலிருந்து குன்னூா், கோத்தகிரி, கூடலூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் போக்குவரத்தை சீரமைத்து, வாகனங்கள் சென்றுவர ஏற்பாடு செய்தனா்.

உதையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com