‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குன்னூரில் குடியிருப்பு அருகே உலவிய கரடி

நீலகிரி மாவட்டம், குன்னூா்  அருகே  ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் குடியிருப்புப்  பகுதியில்  செவ்வாய்க்கிழமை கரடி உலவியது. இதைப் பாா்த்து அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

News image

குன்னூா் ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் பகுதியில் குடியிருப்பு அருகே உலவிய கரடி.

Updated On :16 ஜூலை 2024, 11:22 pm IST

குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. குறிப்பாக உணவு, தண்ணீா் தேடி வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகள் நாள்தோறும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.

 இந்நிலையில் குன்னூா் அருகே உள்ள  ஓட்டுப்பட்டறை வசம்பள்ளம் பகுதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மழையில் கரடி ஒன்று   உலவிக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் அந்தக் கரடி அங்கேயே சுற்றிக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

அசம்பாவிதம் எதுவும் நடக்கும் முன் இந்தக் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட  வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.