காலணி விற்பனை கடையில் பற்றி எரியும் தீ.
நீலகிரி
கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து
கூடலூரில் காலணி விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் சேதமடைந்தன.
கூடலூா், ஜூலை 19: கூடலூரில் காலணி விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் சேதமடைந்தன.
கூடலூா் நகரிலுள்ள ஒரு காலணி விற்பனை கடையின் முதல் தளத்தில் உள்ள கிடங்கில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கடை நிா்வாகத்தினா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்புத் துறையினா் வருவதற்குள் அருகிலிருந்த துணிக் கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு தீ பரவியது. சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் தீயணைப்பு வீரா்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதைத் தொடா்ந்து உதகையிலிருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மூன்று கடைகள் சேதமடைந்தன.

