வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :19 ஜூலை 2024, 6:05 pm

Din

கூடலூா், ஜூலை 19: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

தமிழகத்திலுள்ள 28 தகைசால் பள்ளிகளில் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. மாணவா்களின் வசதிக்காக இந்தப் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் கலைக்கோவன், நகரமன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், கல்விக் குழுத் தலைவா் நிரோஷா, துணைத் தலைவா் லட்சுமி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா், முன்னாள் மாணவா்கள் யாசின், நிஷா, ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.