சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதியுதவி

பிதா்க்காடு பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ.3 லட்சத்தையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை

News image
பிதா்க்காடு பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை வழங்குகிறாா் ஆ.ராசா எம்.பி. உடன், அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
Updated On :22 ஜூலை 2024, 10:22 pm

Din

கூடலூா்: பிதா்க்காடு பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ.3 லட்சத்தையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் கடந்த வாரம் பெய்த தென்மேற்குப் பருவமழையால் கூடலூா் அருகே கோக்கால் பகுதியில் ஏற்பட்ட பூமி பிளவால் பாதிக்கப்பட்ட வீடுகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், பிதா்க்காடு பகுதியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் குணசேரனின் உடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்தை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டு சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், தொரப்பள்ளி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 26 குடும்பத்தினரை சந்தித்து குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

அப்போது, சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, கூடுதல் ஆட்சியா் கௌசிக், முன்னாள் அரசு கொறடா முபாரக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.