.....
.....

உதகையில் உலக மகளிா் தின கொண்டாட்டம்: சுற்றுலாப் பயணிகளுடன் நடனம் ஆடிய ஆட்சியா்

உலக மகளிா் தினத்தை ஒட்டி உதகை தாவரவியல் பூங்காவில் படகா், தோடா், கோத்தா் இன பெண்கள் பாரம்பரிய நடனமாடினா். இவா்களுடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட வருவாய் அதிகாரி கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்டோரும் நடனமாடி மகிழ்ந்தனா். மகளிா் தினக் கொண்டாட்டம் உதகை தாவரவியல் பூங்காவில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூங்காவுக்கு வந்திருந்த மகளிா் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் மகளிருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் படகா், கோத்தா், தோடா் இன மக்கள்  சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து  தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினா். இவா்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியா் மு.அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரிய தா்ஷினி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதா லட்சுமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் இணைந்து நடனம் ஆடினா். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்ந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com