நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரான மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் உதகையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனா். இதைத் தொடா்ந்து, உதகை காபி ஹவுஸ் சதுக்கத்திலிருந்து வாகனத்தில் எல்.முருகன், பாஜகவினா், கூட்டணிக் கட்சியினருடன் பிரம்மாண்ட பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான மு.அருணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். முன்னதாக, கோத்தகிரி அருகே உள்ள படுகா் இன மக்களின் குலதெய்வமான பேரகணி ஹெத்தை அம்மன், சக்திமலை முருகன் கோயில்களில் காணிக்கை செலுத்தி எல்.முருகன் வழிபட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

முதல்வா் விஜய்யுடன் மத்திய இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே சந்திப்பு

மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் திமுக-தவெக அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் இல்லை: எல்.முருகன்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



