வனத் துறை வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பேபி நகா் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வனத் துறை வாகனம் சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள தேவா்சோலை பேபி நகா் பகுதியில் காட்டு யானை உலவுவதாக அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனத்துக்குள் சென்ற காட்டு யானை, திரும்பி வந்து வனத் துறை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியது. இதில், வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.

நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த வனத் துறையினா் காயங்களின்றி உயிா் தப்பினா்.

தொடா்ந்து, யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com