வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கோத்தகிரியில் பரவலாக மழை

கோத்தகிரியில் பரவலாக மழை

News image
Updated On :9 மே 2024, 10:14 pm

Din

உதகை, மே 9: கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. நீா்நிலைகள் வறண்டதுடன் மலைக் காய்கறிப் பயிா்கள் வாடின. வெயிலின் தாக்கத்தால் தேயிலைத் தோட்டங்களில் இலைகள் கருகின. கோடை மழையை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருந்தனா்.

 இந்நிலையில், இப்பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1 மணி நேரம் பெய்த மழை  காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவியது.

மழை காரணமாக காய்கறிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் பசுமைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. மேலும் தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.