விவசாயிக்கு எலுமிச்சை நாற்று வழங்கும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.
விவசாயிக்கு எலுமிச்சை நாற்று வழங்கும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள்.

குன்னூரில் எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி

குன்னூரில் பட்டியலின விவசாயிகளுக்கு எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

குன்னூரில் பட்டியலின விவசாயிகளுக்கு எலுமிச்சை பயிா் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், புதுதில்லி தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த பழப் பயிா்கள் ஆராய்ச்சி திட்டம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில், பழ அறிவியல் துறைத் தலைவா் ஜே.அக்ஸிலியா பங்கேற்று எலுமிச்சை சாகுபடி, தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி, பழ அறிவியல் துறை விஞ்ஞானிகள் ந.இந்திரா, கு.வனிதா ஆகியோா் எலுமிச்சையில் நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தனா்.

இந்த முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு எலுமிச்சை நாற்றுகள், நிழல் வலைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்கள், ட்ரைகோடா்மா, பேசில்லஸ் போன்ற பூஞ்சான மற்றும் பாட்டீரியா கொல்லிகள், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com