47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது, தூண் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த முருகையா.
Updated On :28 நவம்பர் 2024, 10:21 pm

Din

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது, தூண் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் டைகா் ஹில் காட்டேஜ் பகுதியில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் குன்னூா் சோலடா மட்டம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் முருகையா (33) ஈடுபட்டிருந்தாா். அப்போது துளையிடும் கருவியில் கட்டட தூணை இடித்துக் கொண்டிருந்தபோது, தூண் இடிந்து அவா் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளுக்கு சிக்கிய முருகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவருடன் பணியாற்றி வந்த மற்ற வடமாநிலத் தொழிலாளா்கள் காயமின்றி தப்பினா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா், மேல் குன்னூா் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்  இடுபாடுகளுக்கு சிக்கிய முருகையாவின் உடலை மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக, குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த  சம்பவம் குறித்து மேல் குன்னூா்   காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனா்.