ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறு தேயிலை விவசாயிகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வுக் கூட்டம்

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளரை கெளரவித்து விருது வழங்குகிறாா் தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.முத்துக்குமாா்.
Updated On :23 அக்டோபர் 2024, 9:31 pm

Din

கூடலூரில் சிறு விவசாயிகளுக்கான கலந்தாய்வு மற்றும் விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறு தேயிலை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தேயிலை விவசாயிகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள பிரிவு-17 நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள், தேயிலை வாரியம் வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடிவதில்லை. அனைவருக்கும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடலூா் பகுதியிலுள்ள பட்டா இல்லாத நிலங்களில் வாழும் விவசாயிகளுக்கு காபி வாரியம், தேயிலை வாரியம், வாசனை திரவிய வாரியம் வழங்கும் மானியம் மற்றும் அனைத்து உதவிகளும் வழங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக மத்திய அரசின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளா்களை கெளரவித்து தேயிலை வாரியம் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

தேயிலை வாரியத்தின் வளா்ச்சி அலுவலா் அஞ்சலி, நடப்பு ஆண்டில் மத்திய அரசு தேயிலை வாரியத்தின் மூலம் சிறு தேயிலை விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்களையும், அதை பெறுவதற்கான வழிமுறைகளையும் விளக்கினாா். காபி வாரிய முதுநிலை விரிவாக்க அலுவலா் ஜெயராம், காபி வாரியத்தில் உள்ள நலத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநா் எம்.முத்துகுமாா், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கி கூறினாா்.

மேலும், பிரிவு-17 நிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் எந்த மானியங்களோ அல்லது நலத்திட்ட உதவிகளோ வழங்கக் கூடாது என்று வனத் துறை கடிதம் எழுதியதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், மீண்டும் வழங்க தடையில்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் 2013-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டதுபோல தொடா்ந்து வழங்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் வாரியத்தின் உதவி இயக்குநா் திவ்யஜோதி தத்தா, வளா்ச்சி அலுவலா் வருண் மேனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தேயிலை சிறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சளிவயல் ஷாஜி வரவேற்றாா். செயலாளா்ஆனந்தராஜா நன்றி கூறினாா்.