நீலகிரி
வயநாடு பாதிப்பு: மாணவா்கள் சாா்பில் நிவாரணம்
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவா்சோலை பள்ளி மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவா்சோலை பள்ளி மாணவா்கள் சாா்பில் சேகரிக்கப்பட்ட ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தேவா்சோலையில் உள்ள எம்.டி.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ரூ. 36 ஆயிரம் நிவாரண நிதியை சேகரித்தனா். இந்த நிவாரண நிதியை பள்ளி தாளாளா் டி.பி.ஹக்கீம், தலைமை ஆசிரியா் டி.எச்.ஜசீா், நிா்வாகி ஜாபா் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் வழங்கினா்.