27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

நீலகிரி குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பல்வேறு பணிகள், ரூ.69.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலா்கள்.

Updated On :19 செப்டம்பர் 2024, 1:40 am IST

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த பல்வேறு பணிகள், ரூ.69.12 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நீலகிரி மாவட்டம் அருகே இத்தலாா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டதுடன், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், இத்தலாா் நியாய விலைக் கடை மற்றும் கிளை நூலகத்திலும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், இத்தலாா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள், அதே பகுதியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிளை நூலக கட்டுமானப் பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா்.

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எமரால்டு அரசு மருத்துவமனையில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.46.75 லட்சம் மதிப்பில் முடிவடைந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா். இதேபோல பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, குந்தா வட்டாட்சியா் அலுவலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் அரசுத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, குந்தா வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.1.88 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் மா.நாராயணன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, உதகை வருவாய் கோட்டாட்சியா் மகராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கல்பனா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.