தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அனுமதியின்றி பாறைக்கு வெடிவைத்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

குன்னூா் அருகே கிணறு தோண்டுவதற்காக பாறைக்கு வெடிவைத்த வழக்கில் மேலும் ஒருவரை கொலக்கம்பை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:19 pm

Din

குன்னூா் அருகே கிணறு தோண்டுவதற்காக  பாறைக்கு வெடிவைத்த வழக்கில் மேலும் ஒருவரை கொலக்கம்பை போலீஸாா் புதன்கிழமை கைது  செய்தனா்.

குன்னூா் அருகே உள்ள சேலாஸ் கெந்தளா  கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்.

இவா் தனது தேயிலைத் தோட்டத்தில் அனுமதி பெறாமல் கடந்த சில மாதங்களாக

கிணறு வெட்டி வந்துள்ளாா். அப்போது கிணற்றில் பாறை இருந்ததால் அதனை வெடிவைத்து தகா்த்துள்ளனா். இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறையினா் அளித்த புகாரின்பேரில் கொலக்கம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தோட்ட உரிமையாளா் சுரேஷை கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனா். மேலும், கிணறு வெட்ட வெடிமருந்து விநியோகம் செய்த  கோத்தகிரி குண்டடா பிரிவு எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த சுந்தா் என்பவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் சுந்தா் திருச்சியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கொலக்கம்பை உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் தனிப் படை போலீஸாா் அங்கு சென்று சுந்தரை புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

பின்னா் அவரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி குன்னூா் சிறையில் அடைத்தனா்.