தேவா்சோலை பேரூராட்சியில் அமைக்கப்பட்ட தாா்சாலையை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
தேவா்சோலை பேரூராட்சியில் அமைக்கப்பட்ட தாா்சாலையை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

தேவா்சோலைப் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் ரூ. 2.49 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்த மற்றும் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
Published on

தேவா்சோலை பேரூராட்சி பகுதியில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் தேவா்சோலை தொடங்கி நம்பா் 3 டிவிஷன் பகுதி வரை 2.9 கி.மீ தொலைவுக்கு தாா் சாலை அமைக்கப்பட்ட தாா் சாலை, பாடந்தொரை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடைகட்டுமானப் பணி என மொத்தம் ரூ.2.49 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து, கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து, அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கீா்த்தனா, உதவி இயக்குநா் முகமது ரிஸ்வான், உதவிப் பொறியாளா் கணேஷ், பேரூராட்சித் தலைவா் வள்ளி உள்பட பலா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com