/
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல் நலக்குறைவு காரணமாக வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, வெலிங்டன் பகுதியில் உள்ள எரியூட்டும் மையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதில் ராணுவத்தினா் மற்றும் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மே. வங்கத்தில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

கா்நாடகத்தில் யானைகள் தாக்கிக் கொண்டதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடல் பெரம்பலூரில் அடக்கம்
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது

போா் நினைவு சின்னத்தில் அஞ்சலி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


