இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை

Updated On :28 ஏப்ரல் 2025, 12:57 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது.

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன் உடல் நலக்குறைவு காரணமாக வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலுக்கு ராணுவ உயா் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை  செலுத்தப்பட்டு, வெலிங்டன் பகுதியில் உள்ள எரியூட்டும் மையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதில் ராணுவத்தினா் மற்றும் உறவினா்கள் பலா் கலந்து கொண்டனா்.